Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்.எண்.277.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தெட்டாம் அதிகாரம்.
மனோ சக்தி.

7.
அருட்கான் முளையே அகமனமாற் றேறி
பொருட்சேர் அருள்வடிவிற் போது.
277.

குறள் விளக்கம்.
கான்முளை = பிள்ளை, இங்கு அருட்காலாகிய திருவடி சக்தியின் அம்சமாகிய மனத்தைக் குறிக்க வந்துள்ளதாம். இம் மனோ தத்துவ உண்மையை ஓர்ந்து அருள் வடிவான மெய்ப் பொருளை அடைதல் வேண்டும்.
அகமனம் + மால் + தேறி = உள்மனத்தின் மால் அல்லது பெருமையை ஓர்ந்து தெளிந்து எனக் கொள்ளலாம் அல்லது
அகமனம் + மாறு + ஏறி = பொன் போன்ற சுத்த மனத்தில் அருள் உணர்வாகிய மாற்று உயர்ந்து என்றும் கொள்ளலாகும்.