Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.276.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தெட்டாம் அதிகாரம்
மனோ சக்தி

6.
தவயோக மேற்றுத் தலைவனென வாழ்த்தும்
பலமாற்றாப் புன்மனம் பாழ்.
276.

குறள் விளக்கம்.
திருவருள் வழங்கியுள்ள நம் மனோ சக்தியைக் கொண்டு இறப்பிறப்பற்ற நித்தியானந்த நிலையை அடைய வேண்டியதே திருவுள்ளமாகும்.
இதை உணராமல், அம்மனோ சக்தியைக் கொண்டு, வெறும் தவ யோக முயற்சியால், பல்வேறு சக்திகள் எய்தி பலருக்கும் தலைவன் என வாழ்ந்தாலும், எடுத்த பிறவி பயனற்றதாகவே முடிகின்றதாம்.
பிறவிப்பயன் பெற்றுத் தராத மனம் பாழாவதால், புன் மனம் எனக் கூறப் பட்டது. ஆன்ம இன்ப லட்சியமாகிய பயனைப் பெற்றுத் தரும் மனமே பொன் மனம் ஆகப் போற்றப் படுகின்றது.