Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.274.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தெட்டாம் அதிகாரம்.
மனோ சக்தி.

4.
மனவாற்றல் கொண்டு மறையாதி நூலை
வனைந்தார் பொருளை மறந்து.
274.

குறள் விளக்கம்.
மெய்ப் பொருளுணர்வு, புலனறிவுக்கு அப்பாலானது. மன வாக்குக்கு எட்டாதது. சுத்த தயவினால் பெற வேண்டியது. ஆனால் அதை அறியாது புலன் வழியில் புறத்தே ஓடுகின்ற கற்பனை ஓட்டத்திலே கண்ட நூல்கள் தான் பழைய வேத வேதாந்தம் முதல் இன்றைய நவீன கதை கட்டுரைகள் யாவும்.
இப்படி வெளியான, வெளியாகின்ற நூல்கள் யாவும் பயிற்சி பெற்ற மனக் கற்பனையில் புற முயற்சியே ஆகும்.
மறப்பற்ற அருள் நிலையில் சேர்த்தல்தான், தயை நிரம்பிய சுத்த மனோ சக்தியின் பெரும் செயல்.