தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தெட்டாம் அதிகாரம்.
மனோ சக்தி
|
2.
|
கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலாம்
இற்குலாம் உள்ளத் திருந்து.
|
272.
|
குறள் விளக்கம்.
அகத்தே விளங்கும் உள்மனத்தில் ஒருமையால் தங்கும்போது சாதாரண அலை மனத்தால் பொறி புலனுடன் கூடி அறிதற்கும் கேட்டற்கும் காணற்கும் அனுபவிக்கவும் அரியதைக்கூட, அறிந்தும் கேட்டும் கண்டும் அனுபவித்தும் கொள்ளலாம்.
இவ்வுள் மனம் பேராற்றல் கொண்டது. பொறி உடம்பின் கரண சக்திக்கு பன்மடங்கு பெரும் சக்தி கொண்டதாம்.
இல்+குலாம் = இற்குலாம் = அகத்து விளங்கும்
இவ்வக விளக்கத்தால் உண்மை கண்டு உயர் இன்பம் பெறுவது நம் லட்சியமாகக் கொள்ளல் வேண்டும்.
Write a comment