தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தேழாம் அதிகாரம்.
|
10.
|
தயாமூல ஆதார தற்கல்வி யூட்டின்
பயானக மாற்றும் படிக்கும்.
|
270.
|
குறள் விளக்கம்.
உலகிலே அதிக அச்சத்தைத் தரும் போர் முதலான நாச காரியங்களை ஒழித்து பேரமைதியையும், இன்ப வாழ்வையும் தரவல்லது, சுத்த தயவுக் கல்வியே.
இதை ஆரம்ப நிலையிலிருந்தே கற்றுத் தருதல் வேண்டும். இத் தயவுக் கல்விதான், மூலாதாரக் கல்வி. தற்கல்வி. தனக்குச் சொந்தமான படிப்பு. மற்றவை யாவும் சந்தைப் படிப்புதான்.
தயவு ஆதாரக் கல்வியினால், ஜீவ தயவு மேலிட்டு, சர்வ தேச சமாதானம் சகோதரத்துவ இன்ப வாழ்வு எங்கும் தழைக்கும். மனவொறுப்பால் அடையக் கூடிய உயர்பண்பாட்டை இக் கல்வியே தருவது.
இந் நூலின் தொடக்கத்தில் குறிக்கப்பட்ட தயாமூல தன்ம நெறிக்கு இக் கல்வியே துணையாகக் கொண்டு ஓதல் வேண்டும்.
Write a comment