தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தேழாம் அதிகாரம்.
|
9.
|
பழக்க இளமையிற் பண்போ டுளத்தை
அழுக்காற் றொருத்த லரிது.
|
269.
|
குறள் விளக்கம்.
குழந்தைப் பருவத்தில் இருந்தே மனம் பண்பாடு அடைய நல்ல வழியில் பழக்குதல் வேண்டும். அவ்வாறு பழக்குதல் தான் எளிது. இதனால்தான் ‘இளமையில் கல்’ என்றனர்.
மனத்தில் பொறாமை முதலிய அழுக்குகள் நிறைந்து, தடிப்பேறிய பின்னர், அவற்றை ஒறுத்து விளக்குவது கடினம். பெரு முயற்சி செய்து, திருவருளால் விலக்கிக் கொள்ளலாம். அதற்கு தயா சன்மார்க்கம் மேற்கொள்வது, நல்ல துணையாகும்.
இந்த தயா விதையை சிறுபோதே நட்டு வளர்த்தால், காலத்தே வளர்ந்து, தழைத்து, படர்ந்து, பூத்துக் காய்த்துக் கனியும் வழங்கப் பெற்று பெருமகிழ்வு அடையலாம்.
Write a comment