தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தேழாம் அதிகாரம்.
மனவொறுப்பு
|
3.
|
புளிகொண்டு செம்பு பொலிவுறுந் நாளும்
அளிகொண்ட வுள்ளத் தருள்.
|
263
|
குறள் விளக்கம்.
செம்பைத் தினமும் புளியிட்டுத் தேய்த்தால்தான் நன்கு ஒளிவிட்டிலங்கும். அப்படிச் செய்யாவிட்டால் ஒளி குன்றி களிம்பேறி மங்கிப்போம்.
இதுபோன்றே தினமும் மனத்தின் கண் அன்பு பெருகச் செய்வதால், அருள் வண்ண ஒளி வளரும். இன்றேல், மலமாசு படிந்து மங்கி இருண்டு போம்.
பரிசவேதி என்னும் குளிகை மணியால் செம்பு பொன்னாக மாற்றப் படுவதுபோல் அருட்சோதி மணியின் சேர்ப்பால் மனம் சகல கேவல மலமாசு நீங்கி, சுத்த பொன்னாகத் திகழும்.
Write a comment