Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.262.

தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
இருபத்தேழாம் அதிகாரம்.
மனவொறுப்பு

2.
அவாமனத்தைச் சுட்டு அருள்வண்ண மாகி
யுவாமதி யென்ன வொளிர்.
262.

குறள் விளக்கம்.
மனிதன் அருள் வண்ணமாகி ஒளிர வேண்டுமானால் அவா மனத்தைச் சுடல் வேண்டும். அசுத்த அவாவினால் மனம் படர்ந்து கொண்டே இருப்பதாம். அதனை தயா ஞானத்தால் சுட்டால் எரிந்து நீறாக விடும். அருள் வண்ணமாகி நிலவும்.
அப்போது அம்மனம் கலங்க மதி கொண்டதல்ல. களங்கமற்ற நித்திய பூரண மதியாய் நிலவுவதாம். அகத்தே இந்த ஞான மயமானவனே அருள் வண்ணன் ஆனவனாகக் கூறப்படும்.