Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.260.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தாறாம் அத்தியாயம்.
மனவமைதி.

10
நலமே யருளும் நமதண்ண லென்றுள்
ளுலவா தமைக வுவந்து.
260

குறள் விளக்கம்.
நமது பதி, தயா வள்ளல். ஆகையால் நமக்கு மேலான நல்லின்பம் பயப்பனவே அருளும் என்ற திட நம்பிக்கையுடன் உள்ளம் கவலையினால் சலியாது அமைதியோடு இருத்தல் வேண்டும்.
நம் பதியின் அருளுண்மைத் திருச்செயலை உள்ளவாறு அறியாததினால், உலக வாழ்வில் ஏதுறுமோ ? என்று அஞ்சி, மனம் மருகி வாட நேருகின்றது.
ஆனந்த அனுபவம் பெறுவதற்கு, உலக வாழ்வு ஒரு சோதனைக் களம். இதில் நன்மை, தீமை, சுக துக்கம் முதலியன கண்டுதான் தேற வேண்டும். அப்போதுதான் மனம் அருளில் அசைவற நிலைக்கும். ஆனந்தம் காணும்.
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.260.

தினம் ஒரு தயவுக்குறள்-எண்.260.