Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்.எண்.258.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தாறாம் அத்தியாயம்.
மனவமைதி.

8
மாசற்ற தன்மை மனத்தி லடைந்தாக்கா
லீசனைக் காட்டு மிது.
258.

குறள் விளக்கம்.
சுயம்பிரகாசமுடைய மனமணியை மல அழுக்கு மூடி ஒளியற்றுக் கிடத்தலால், அதன் உண்மை விளங்குவதில்லை. அவ்வழுக்கு ஐம்புலனிச்சை நீங்கி அருள் உணர்வு மேலோங்கும் போது சுத்தமாக்கப் படும். அப்போதுதான் அக உண்மை ஒளி விளங்கும். சாந்த மனத்தில் சுடர் விடும் சோதியுட் சோதியாய் கடவுள் உண்மை அனுபவப்படும்.
ஆதலின்,. மாசற்ற தன்மையே கடவுள் தேசொளியைக் காட்டுவது என்று அறிய வேண்டும்.
“மாசற்ற கொள்கை மனத்தில் அடைந்தாற்கால்
ஈசனைக் காட்டும் உடம்பு”
என்பது அவ்வை ஞானக் குறள்.