தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தாறாம் அத்தியாயம்.
மனவமைதி.
|
6.
|
கறங்கா மனத்தின் கலையா நிலையத்(து
உறங்கா திருக்கும் ஒளி.
|
256.
|
குறள் விளக்கம்.
மறப்பற்ற நெஞ்சிடை மறைப்பற்று விளங்குகின்றது, கடவுள் ஒளி.
மனம் சுழன்று ஓடித்திரியாது, ஒருமை நிலை நின்று கலையாது தயவோடு நிலவும்போதுதான், உள்ளொளி கண்டு கொள்ளப்படும். சாதாரணமாக மன ஒருமையில் நினைத்த பொருள் தோன்றி ஒருமை கலைய, உடன் கலைந்து போம்.
மனம் திருவருளாலே நினைப்பு, மறப்பு, அற்ற சுத்த நிலை பெறும்போதுதான் அகங்கண்ட ஒளி மறையாது. நிலைத்திலங்குவதாம்.
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.256.
Write a comment