Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.254.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தாறாம் அத்தியாயம்.
மனவமைதி.

4.
அமைவுற் றருணின்(று) அரும்பலாற் பார்மேல்
கமையுற்றிங் கியாவுமே காண்.
254.

குறள் விளக்கம்.
சலனமற்ற அருட்பெருஞ் ஜோதி அகத்தே மன்னியுள்ளது. அவ் வகத்திருந்துதான் அக்கடவுட் சக்தி பொருட் பிரபஞ்சமாக சதா வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது
அக ஆற்றலே, புறப்பொருளாக மாற்றப் படலும், பொருளைச் சக்தியாக மாற்றலும், விஞ்ஞான சோதனைக்கும் விளங்குவதேயாம்.
நாம் அகத்திருந்து அருளோடு சூழுலகை நோக்கினால், யாவும் அருள் மயமாக விளங்கக் காண்போம். எந்த விதமான சூழ்நிலையிலும், மனம் சலிக்காது ஒருமையோடு நோக்கி தயவுப் பணி புரியவும் முடியுமாம்.