Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்.எண்.253.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தாறாம் அத்தியாயம்.
மனவமைதி.

3.
சாந்த மிலை யெனிற் செளக்கியமு மில்லாகு
ஆர்ந்திடுக வுள்ளத் தயின்று
253.

குறள் விளக்கம்.
அகத்தில் மன அமைதி இல்லையாயின் உடல் நல வாழ்வு நிலைக்காது. அந்த மனச் சாந்தியும் நம் சுத்த தயா மார்க்கத்தினின்று பெறுவதே சாலச் சிறந்ததாம்.
மற்ற வழியில் வருவது சோதனை முன் நிற்காது. ஆதலின் உபசாந்த நிலையில் உள்ளொளி பெருக நின்று உலகியலில் வாழ்வோமாக.
“சாந்தமு லேன செளக்கியமுலேது” என்பதும் காண்க.
அயின்று = உட்கொண்டு, உண்டு.