தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தாறாம் அத்தியாயம்.
மனவமைதி.
|
1.
|
முக்குற்ற மற்ற முயற்சி வழிவரும்
பக்குவ மாமனப் பண்பு.
|
251
|
குறள் விளக்கம்.
நகை முதல் உவகையீறாய எட்டு மெய்ப்பாட்டாலும் மனமும் உடற்கருவிகளும் பலவித உணர்ச்சிகளும் மாறுதல்களும் அடைவதும், கலைவதுமான அனுபவங்கள் பெற்றபின், அவற்றைப் பற்றற விட்டு, அமைதியில் நிலவ வேண்டும் என்ற நாட்டம் உண்டாகும். இந் நிலையே ‘உபசாந்தம்’ என்பர். இதனை ஒன்பதாம் மெய்ப்பாடாகவும் கூறுவர், ஒரு சாரார். இந்த நிலையைத்தான் இந்த அதிகாரத்தில் மன அமைதியாகக் கொண்டு தெரிவிக்கப் படுகின்றது.
இவ்வமைதி மனப் பண்பு உண்டாக தயா நன் முயற்சி மேற்கொண்டு காமம், வெகுளி, மயக்கமாகிய முக்குற்றங்களைக் களைந்து பழகுதல் வேண்டும். இப் பழக்கத்தால்தான் சிறிது சிறிதாக மன அமைதி உண்டாகும்.
Write a comment