தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்.
உவகை.
|
10.
|
ஒளிவளர் மாங்கனி யுண்டொன் றதனைக்
கிளர்வெளி நின்றுண் கிளி.
|
250.
|
குறள் விளக்கம்.
கிளி = சுகம், இன்பம், பேரின்பம்.
இந்தச் சுக நிலை தேகப் பற்றற்ற அகவெளியிலே இருந்து அனுபவிக்கப் படுவதாம். ஆன்மாகாச அகவெளியிலிருந்து பேரின்பமுறுவதுதான் கிளி மாங்கனியை உண்டு களிப்பதாம்.
இந்நிலைதான் பிரணவ தேக நிலை. அருவுருவ சித்தி நிலை என்பதுமாம். இந் நிலை அனுபவம் கூடியபோது சுத்த தேக, ஞான தேக, சித்தியும், உடனாய் விளங்கும்.
இம்முத்தேக சித்தி நிலை குறிக்கவே வாழை, மா, பலா என்னும் முக்கனி வழங்கப் பெறும். இம் முக்கனியின் இன்பம், முத்தேக சித்திப் பேரின்பத்திற்கு உலகியலார் கண்ட உவமைப் பொருளாம்.
Write a comment