Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.249.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்.
உவகை.

9
உயிரு மறிவு மொளிரச் செயலே
நயமா மூவகை நலம்.
249.

குறள் விளக்கம்.
சிறப்பாகிய பெரிய உவகை அல்லது இன்பம் யாதெனில், உயிர் விளக்கமும் அறிவு விளக்கமும் உண்டு பண்ணும் சீவ தயா செயலேயாம்.
மற்றபடி இடம்பம், ஆரவாரம், வீண் செயல் இவைகளால் பெறக்கூடிய இன்பம் மிகத் தாழ்ந்தன. இவை உண்மையில் பயனற்றனவே.
ஆதலின் சீவ விளக்கம் தரும் பணி புரிதலும், ஆன்ம விளக்கம் தரும் அறிவு கொளுத்தலும் பேருவகை அடையத் தகுதி யருள் பெரு நெறியாம்.