தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து நான்காம் அத்தியாயம்.
|
10
|
கொதிப்படையா துள்ளங் குளிர்ந்திட அன்பால்
துதித்திடுக சேரும் சுகம்.
|
240
|
குறள் விளக்கம்
அகநெகிழ் அன்பினால், ஆண்டவரைத் தோத்தரித்தால் பெரு நன்மை யுண்டாம். இப் பழக்கத்தால், உலகியலில் பழகுந் தோறும் இனிக்கப் பேசும் இயல்புண்டாம். சினமும் வெகுளியும் தோன்றா. ஆதலின், அவற்றால் உண்டாகும் உட்சூடும், புறக் கொதிப்பும், மற்ற தேகேந்திரியக் கேடுகளும் உண்டாகா.
ஒருமையும் தயவும் நிறைந்த துதியால் கடவுள் ஞானமும் இன்பானுபவமும் வாழ்வும் சித்திக்கும்.
Write a comment