Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.238.

தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
இருபத்து நான்காம் அதிகாரம்
வெகுளி

8.
பதியருளாற் சூழும் பலவும் அவன்றன்
விதியால் வெகுளி விடு.
238

குறள் விளக்கம்
நமது ஆண்டவருடைய அருள் ஆணையின் படியே எவ்வுயிரும் எப்பொருளும் நம்மைச் சூழ்கின்றன. அவற்றால் நாம் தயை பெருக உலகியலை நடத்தக் கடமைப் பட்டுள்ளோமே அன்றி, அவர் தம் ஆணையாகிய விதிக்கு மாறுபட்டு, சூவனவற்றின் மீது வெறுப்பு கொண்டு வெகுண்டு ஒதுக்கி, நல்வாழ்வை தாழ்வாக்கிக் கொள்ளக் கூடாது. ஆதலால், வெகுளியை விட்டு அன்போடு வாழப் பழகுதல் வேண்டும்.