Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.234.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து நான்காம் அதிகாரம்
வெகுளி

4.
உட்சினத் தாலே உருவாகி நோய்பல
சுட்டிடும் மெய்யினைச் சூழ்ந்து
234

குறள் விளக்கம்
அகத்திலே சினம் தோன்றும் காரணமாகவே அகக்கருவி கரணங்களும்,, அகப்புறமுள்ள சப்த தாதுக்களும் சூடேறி, அவற்றின் தன்மை ஓரளவு மாறுபடுவனவால் பல்வேறு நோய்களுக்குக் காரணமாகின்றன.
இவையன்றி, உலகில் புறத்தே நிகழும் தினசரி வாழ்விலும், உட்சினத்திற்குத் தகவே நோய் தரு சூழ்நிலையே விதி அமைத்துக் கொடுக்கின்றது. மேலும், கனவு நிலையிலும் கூட, அமைதியற்று வெருளும் நோய் செய்யும் காட்சித் தோற்றமே அனுபவிக்கப்படும்.
ஆதலால், இவ்வுலகில் நோயற்ற வாழ்வு வாழ, சினமற்ற உள்ளப் பயிற்சி மேற்கொள்ளல் வேண்டும்.