Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.227.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து மூன்றாம் அதிகாரம்.
பெருமிதம்.

7.
சித்தரொடு முத்தருஞ் சேர்ந்தநிலை கண்டுமிகப்
பக்தியொடு போற்றிப் பதி.
227

குறள் விளக்கம்
எல்லாம் வல்ல பதியின் சக்தியில் ஓர் அணுவளவு பெற்று அதனால் அற்புத சித்திகள் கைவந்த சித்தர்களாகவும், முத்தர்களாகவும் விளங்கும் ஆன்மாக்களைப் பற்றி நாம் சற்று ஆய்ந்து அறிந்து கொள்ளும்போது, எல்லோருக்கும் தாயகமாய், தனித்தலைமையோடு இலங்கும் அந்தப் பூரண பதியின் சேர்க்கையால் நாம் அடையக்கூடிய பெரிய இன்ப வாழ்வே மிக்குயர்ந்ததாக அறியப்படும்.
ஆதலின். நமது அகங்காரத்தோடு கூடிய பெருமித உணர்ச்சியை முற்றும் ஒழித்து, பதி பதத்தில் பக்தியால் பூரணப் புகல் அடைந்து விட்டால்தான், அந்த உயரின்ப நிலை கிடைப்பதாம்.