Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.225.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்து மூன்றாம் அதிகாரம்.
பெருமிதம்.

5.
எல்லாஞ் செயவல்ல ஈசன் புகழ்பேசல்
அல்லாற் பெருமிதமிங் கியாது.
225

குறள் விளக்கம்
நமக்குப் பெருமையும் பெரு நன்மையும் எது ? என்றால், எல்லாம் வல்ல கடவுளைப் பற்றி, நினைந்து நினைந்து, உள்ளுணர்ந்து உணர்ந்து உள்ளத்திலே உண்மையான தயவு பெருகப் பெருகப் பேசுதல், துதித்தல், விண்ணப்பித்தல்
இவற்றால்தான் நமக்கு இடையறாத கடவுட் பற்று உண்டாகும்.
பின்னர் தயா ஜோதியின் அடைவால் பேரின்பம் சித்திக்கும்.