தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்திரண்டாம் அதிகாரம்.
அச்சம்
|
9.
|
உளநின்ற வள்ளல் உருபல கொண்டு
வளைவதுகண் டஞ்சாமல் வாழ்ந்து.
|
219
|
குறள் விளக்கம்.
நமது உள்ளத்தளியில் தயா வள்ளல் நின்று, நமக்குத் தயானந்த அனுபவம் அளிக்கவே, பலப்பல வடிவொடு, செயலொடு புறத்தே உறுகின்றார். ஆதலின், உளநெகிழ்ந்த தயவுடன் புறத்தணைவோர்க்கு அபயமளித்து வாழ்வித்தல் வேண்டும்.
மேலும், சூழ்வனவற்றைக் கண்டு சிறிதும் அஞ்ச வேண்டியதில்லை. ஏனெனில் அவை எல்லாம் நம் பதியின் தயா சித்துருவே ஆதலின் அவற்றிற்கு சுத்த தயவால் இன்பு செய்தலே நம் வள்ளல் ஆணை.
Write a comment