தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
அச்சம்
இருபத்திரண்டாம் அத்தியாயம்.
|
7.
|
அஞ்சாமை வேண்டும் அருட்பணிக்கு மற்றிங்கு
நெஞ்சாற அஞ்சி நிலை.
|
217
|
குறள் விளக்கம்
உள்ளத்தே தயவோடு எதற்கும் பயப்படாமல் அன்புச் செயல்புரிதல் வேண்டும். தயவில்லாத தீச்செயல் புரிதற்கு அஞ்சுதல் வேண்டும். அந்த இடத்தில் அஞ்சாமல் அக்கொடுஞ் செயல் புரியத் துணிவது அறியாமையே ஆகும்.
ஆதலின், அருட்பணி அல்லாத பிறிதொன்று நேரில், (நெஞ்சு ஆற) மனக் சாந்தி அடைந்து தயவால் தண்மையுறும்படி, அஞ்சியுள் நடுங்கி ஒடுங்கி உள்ளத் தொளிரும் தயா பெருஞ்ஜோதி பதியோடு நிலைத்தல் வேண்டும்.
Write a comment