தயவுக் குறள்.
சுவாமி சரவணானந்தா
உரை விளக்கம்.
| 4. |
மெய்யன் பிலார்தம் வெளிகண் டகமறுகும் வையகத் தழிவஞ்சு மால். |
215 |
குறள் விளக்கம்
நல்லோர் அகம் மறுகும் (உள்ளம் வருந்தும்) எதற்காக ? உலகத்தில் மெய்யன்பு இல்லாதவர்கள், கோப வெறி கொண்டு புரிகின்ற அழி செயல்களைக் கண்டுதான் நல்லோர் அகமறுகுகின்றார்கள். இவர்களின் மன வருத்தம், நாசச் செயல்களைக் கண்டு இரக்கத்தோடு கூடிய அச்சத்தால் உண்டாகின்றதாம்.
இவ்வச்சம் நல்லன்பர்கட்குக் கேடு செய்வதன்று. மிகத் தயவையே விளைவிப்பதாம். இவர்கட்கு இந்த பய உணர்ச்சி அக மனத்திலிருந்து வருவதல்ல, புற மனத்தில் தோன்றியதும். கணத்தில் மறைந்து விடுவது.
இதனைப் பய உணர்ச்சியாகக் கூட சொல்லக் கூடாது என்பதை உணர்த்தவே மால் (மயக்கம்) எனக் குறிக்க்பபட்டுள்ளது.
Write a comment