Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.213

தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்திரண்டாம் அத்தியாயம்.
அச்சம்


3.

அழியா தொளிரும் அருண்மணியைக் கொண்டார்க்(கு)
அழிவே யிலையென் றறி.
213.

குறள் விளக்கம்.
அருட்சோதியாகிய நம் பதி, நித்தியமாக நின்று ஒளிர்பவர். அவரைச் சார்கின்றவனும்,. நித்தியத்துவம் பெற்று விளங்குவான். கடவுட் சார்பு பெற்று,. அத்துவிதமாய் நிற்கும்போது, தனக்கு, எக்கலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், சிதைவில்லை என்ற உண்மையை உள்ளவாறு அறிந்த போது, எதற்கும், சிறிதும் அஞ்சாது நிற்கும் தைரியம் உண்டாகின்றது. இந்நிலையில்தான் சுத்த சன்மார்க்கி உலகில் என்றும் வாழ்வான்.