Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.211.

தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்திரண்டாம் அத்தியாயம்.
அச்சம்

1.
இருணிறை யுள்ளத் திருக்குமே யச்சம்
அருளொளிக் கில்லை யது.
211.

குறள் விளக்கம்
மருட்கை தீர்ந்த விடத்து, அகத்தில் அருள் ஒளியும் அமைதியும் தோன்றிட அச்ச மெய்ப்பாடு நீங்கும் என்பதால் இவ்வதிகாரம் அடுத்துள்ளது.
அருட்சோதியை அகத்திலே எழப் பெற்றவர்கள், உள்ளத்தில் தெளிவும், விழிப்பும், உறுதியும் விளங்கலால் யாதொன்றுக்கும் கலங்காது, அசையாது, அஞ்சாது நிரதிசயானந்த வண்ணமாய்த் திகழ்வர்.
அப்படி இல்லாதவர்களின் அகத்தில் அஞ்ஞான இருள் நிறைந்து, பயம், கவலை, துன்பம், அழிவு ஆகியவற்றை உண்டு பண்ணும். அக உண்மை கண்டு நிலவாது, அகங்கரித்து, அச்சமில்லை என வீரம் பேசினும் பயன் ஒன்றுமில்லையாம்.