தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தோராம் அத்தியாயம்.
மருட்கை.
தயவுக் குறள் எண்.209-உரை விளக்கம்.
|
9.
|
அருட்கண் மலர்ந்து அனக நிறை போது
மருட்கை மதனொழிவான் மற்று.
|
209.
|
குறள் விளக்கம் :
அகத்தே அருள் ஒளி கண்டு, அதனையே அந் நிலையினின்றே விரிந்து (அனகமுறச் செய்து)உயிர் உடம்பில்நிறைத்து, அருள் வண்ணமாய் விளங்கும் போதுதான் மருட்கையறும். மன்மதன் அழிவான். அதாவது, தூல காம தேக தத்துவம் (அருள் ஒளிக்கு இடம் கொடுத்து விட்டு) ஒழியும்.
ஆன்மா, அருளொளித் தேகம் பெறாத வரை, கரும தேகம், வினை உடம்பு சூழும். இதற்காக திருவருளே உயிர்களிடத்து சீவ சுபாவமாய், அவாவாய், காம இச்சையாய்த் தோன்றி மேலும் மேலும் பிறவி எடுக்கச் செய்கின்றதாம்.
Write a comment