Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.206

தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தோராம் அத்தியாயம்.
மருட்கை
குறள் எண்.206 உரை விளக்கம்.

6.
பொய்ஞ்ஞானம் பெற்றார் புவிவாழ்வின் நீண்மயக்கில்
மெய்ஞ்ஞானம் காணார் விலைக்கு.
206.

குறள் விளக்கம்
மனோ கரணக் கலைப் பயிற்சியினால் இவ்வுலகிலே அடைகின்ற புலனின்ப மயல் வாழ்வு சதமல்ல. ஆகையால், அதில் கிடைக்கப் பெறுகின்ற ஞானமும் உண்மையல்ல. பொய்யான அருளை (மயல் வாழ்வை) நெடுநாள் பழக்க வசத்தால் மெய்யெனப் பற்றி நின்று மயங்குவதாகும்.
பொருள் கொடுத்து விலைக்கு வாங்குவதற்கும், கலைப் பெருங் கழகங்களில் பயின்று பெறுவதற்கும் இல்லாதது மெய்ஞ்ஞானமாம் கடவுள் அனுபவம்.
அருள் ஒழுக்கத்தோடு கூடிய அக விசாரத்தால் மட்டுமே இம் மெய்ஞ்ஞானத்தை அடையலாகும்.