Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.204

தயவுக் குறள்

சுவாமி சரவணானந்தா.

இருபத்தொன்றாம் அத்தியாயம்.

இளிவரல்.

தயவுக் குறள் எண்.204-உரை விளக்கம்.

204. வியன்கண் டறிவழிந்த மெய்யி னவச

மயநிலையே மாண்பில் மயக்கு.

204.

குறள் விளக்கம். வியன் – பெருமை, ஆச்சரியம்.

புறத்தே காண்கின்ற பெரும் வியப்புக் காட்சியால் மெய்யறிவு நிலை மறந்து, தன் தேக நிலையும் மறந்து தன் வசம் கெட்டு நிற்கும் இயல்பே, புகழற்கில்லாக் குற்றமுடைய மருட்கை எனலாகும்.

அவசம் = தன் வசப்படாமை, தன்னியல் மறந்த மயக்க நிலை.

பரவசம்=பக்தி முதலிய மனோ உணர்வால் உயர்நிலையில் தன்னை மறந்திருத்தல்.

மெய்யின் அவசமய நிலை = மெய்ப் பொருளின் உணர்வு கெட்ட மூட நிலையாம்.

சமயம் = என்பது மெய்ப்பொருள் உணர்வு.

வியப்பில் ஆழ்ந்து, அவசப்பட்டு மெய்ப் பொருள் உணர்வை இழந்து, நிற்றல் மருட்கை எனப்படுகின்றது.