தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தொன்றாம் அத்தியாயம்.
மருட்கை.
தயவுக் குறள் எண்.202-உரை விளக்கம்.
| 2. | கீழென வொன்றைக் கெடுத்திடாய் யாவுமிவண்
வாழுறத் தீர்க மருள் |
202 |
குறள் விளக்கம்
புறத்தோற்றத்தையும், செயலையும் கொண்டு மதித்து, ஒன்றைக் கீழாதென நினைத்து, அதனைக் கேடுறச் செய்திடாதே.
அகத்தே தயாவுணர்வோடு இருந்து கொண்டு, சூழ்வனவற்றை வாழ்வித்தல் வேண்டும். இச் செயலே சித்த சுத்தியைத் தருவது. இருளாய மருளைப் போக்கி அருளாய ஒளியைக் கூட்டி வைப்பதாம்.
Write a comment