தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தோராம் அத்தியாயம்.
மருட்கை.
தயவுக் குறள் எண்.201
உரை விளக்கம்.
|
1.
|
அற்புதங் கண்டுலகில் அங்காத் திடல்வேண்டாம்
புற்புதம் உள்ளருளிற் பூணு.
|
201.
|
குறள் விளக்கம்.
மருட்கையாவது, சில பொருளைச் செயலைக் கண்டு வியந்தேனும், அல்லது அலட்சியம் செய்து இகழ்ந்து, விடுத்தேனும் உள் மயங்கிப் பராக்கில் இருத்தல். இளிவரல் போன்று தவிர்க்கப்பட வேண்டும் என்பதால் அதற்கு அடுத்து வைக்கப்பட்டுள்ளதாம்.
இவ்வுலகில் சாதாரணமாய்க் காண்டற்கு அரிய புதுமையாம் அற்புதம் ஒன்றைக் கண்டு ஆச்சரியப்பட்டு மெய்ம் மறந்து வாய் திறந்து நிற்றல் கூடாது. ஏனெனில் அவ் வற்புதம் புற்புதமே (நீரிற் குமிழியே) யாய் சீக்கிரமே அழிந்து போகும்.
ஆகையால் அதனை விடுத்து, அழியாத அருளில் பொருந்தி நிரதிசயானந்தமாய் இருத்தல் வேண்டும்.
அங்காத்தல் = வியப்பால் வாய் திறந்து நிற்றல்.
Write a comment