Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-குறள் எண்.200

தயவுக் குறள்

சுவாமி சரவணானந்தா.

இருபதாம் அத்தியாயம்.

இளிவரல்.

தயவுக் குறள் எண்.200-உரை விளக்கம்.


10.. இளிவரற் கஞ்சி யிறவாதீர் மெய்யன்

ஒளிபெறிற் சேரும் உய்வு.

200.


குறள் விளக்கம்.

தாழ்வு ஏற்படுமே அல்லது மானம் போய்விடுமே என்று பயந்து கொண்டு சாக வேண்டியதில்லை. ஏனெனில், அத்தாழ்வு மனப்பான்மையும், மான அபிமானமும் மாயா உணர்வுகளே. அவை எல்லாம் அநித்தியமேயாம்.

கடவுள் அருள் ஒன்றே உண்மையானது, நித்தியமானது. ஆகையால் அவ் அநித்தியத்தில் பற்று வைத்து அழியாது, நித்தியமாகிய திருவருளை அடைந்து உய்வு பெற வேண்டும்.