தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபதாம் அத்தியாயம்.
இளிவரல்.
தயவுக் குறள் எண்.198-உரை விளக்கம்.
|
8.
|
போனா லுறுமோதான் புத்துயிர் மானவிழி
வானாலு மேற்கும் அருள்.
|
198.
|
குறள் விளக்கம்.
உயிரானது உடம்பினின்று நீங்கி விட்டால் மறுபடியும், புதிதாக வேறு ஓர் உயிர் வந்து அவ்வுடம்பினுள் சேராது. ஆதலால், பிறந்த பிறப்பின் வாழ்வு அத்துடன் முடிந்துபோம்.
ஆனால், மானக் குறைவு அல்லது இளிவரல் ஏற்பட்டாலோ வாழ்வுக்கே அத்தோடு முடிவும் வந்திடுவதில்லை.
அதற்கு மாறாக உளம் உருகி கருணை நன் முயற்சி செய்தால், ஆண்டவர் அருளைப் பெறவும், அதனால் அழியாப் பேரின்ப வாழ்வு அடையவும் கூடும்.
ஆதலால், எந்த விதத்திலும் திருவருளே லட்சியமாகக் கொண்டு உயிரைக் காத்தல் வேண்டும்.
மற்றபடி உலகியலில் உறுகின்ற புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் பொருட்படுத்தாது, தயா உணர்ச்சியை உண்ணின்று வளர்த்து ஓங்குதல் வேண்டும்.
Write a comment