தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபதாம் அத்தியாயம்.
இளிவரல்.
தயவுக் குறள் எண்.193-உரை விளக்கம்.
|
3.
|
யார்மாட்டு மன்பால் அணிசெய்வ தன்றிபயந்(து)
யார்மாட்டுந் தாழா தகல்.
|
193.
|
குறள் விளக்கம்.
அன்பினாலே எவருக்கும் நன்மை செய்து நலம் காணவேண்டுமே அல்லாது, பிறர்க்கு அஞ்சிப் பணிதல் கூடாது. தாழ்ந்தாரை விரட்டித் தாக்குதலும், வலியாரைக் கண்டஞ்சித் தாழ்தலும், மனத்தில் இழிவு மனப்பான்மையின் இருப்பையே உணர்த்துவதாம்.
ஆதலால் உள்ளத்தில் தயவு நிலை கொள்ளச் செய்து, இளிவரலில்லாது யாவருக்கும் நலம் செய்து பழகல் வேண்டும்.
Write a comment