தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
|
10
|
தங்கணீர் மாறாத் தகைசால் கடவுளருள்
இங்ககலா துற்றார் இயல்பு.
|
190
|
கு.வி- இவ்வுலகத்திலே கடவுள் நிறை அருள் பெற்று அந் நிலையினின்று பிறழாது இருப்பவர்களின் தன்மையாதோ எனின், தம் கண்ணீர் மாறாத தன்மையேயாம்.
தங்கணீர் = தங்கள் நீர், தங்களது தன்மை (அல்லது) தம் + கண்ணீர் = (உள்ளுருகிய தயவின் புறக்குறியாகத்) தங்கள் கண்களில் துளித்த க்ண்ணீர்.
அருள் நிலை அகலாதார் இயல்பு இதுவெனக் காட்டும் குறியே அவர்களது மறையாத தயவுக் கண்ணீராம்.
ஆண்டவனைக் காண வேண்டும் என்று மெய்யாக விரும்பினால் ‘அழுத கண்ணீர் மாறுமா ?” என்ற அருட் சோதி வள்ளல் தோற்றமும் அப்படியே விளங்கி நின்றதாம்.
Write a comment