DAEIOU - தயவு
பழனி வட்டம் ஐவர் மலை..சன்மார்க்க சங்கம்..குழந்தை வேலப்பர் ஆலயம் கும்பாபிஷேகம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் உள்ளது, பாப்பம்பட்டியை அடுத்த ஐவர் மலை என்ற சிறிய குன்று. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் 108 சன்மார்க்க சங்கங்களை நிறுவிய தவத்திரு முருகானந்த அடிகள், இந்த ஐவர் மலையில் ஒரு சிறிது காலம் வசித்துள்ளார். வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறிகளை இப்பகுதியில் வாழும் மக்களுக்கு போதித்துள்ளார். ஜீவகாருண்ய நெறியினைக் கடைப்பிடிப்பதற்கு, இந்த ஐவர் மலையின் மேல், சத்திய தருமச்சாலையினை நிறுவியுள்ளார். முக்கியமான நாட்களில், இங்கு அன்னதானம் செய்யப்படுகின்றது. அருகே உள்ள மக்கள் பலர் இங்கு, மலையின் மேல், குடும்பத்துடன் ஏறி வந்து வந்தனை வழிபாடுகளில் பங்கு பெற்றுச் செல்கின்றனர்.

அதன் மேலுள்ள பகுதியில், குழந்தை வேலப்பர் என்ற ஆலயத்தினையும், அவர் நிறுவியுள்ளார். அதற்கு, தற்போது கும்பாபிஷேகம் செய்யும் முயற்சியில், அந்தப் பகுதி மக்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். தவத்திரு முருகானந்த அடிகளின் சமாதி, வடலூரில், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் இடத்தில் உள்ளது. அரியலூர் மாவட்டத்தில், லிங்கத்தடி மேடு என்ற இடத்தில், இவர் வசித்த இடத்தில், ஒரு பெரிய பள்ளிக்கூடமே தற்போது இயங்கி வருகின்றது. திருச்சி மாவட்டத்தில், வயலூரிலும், அவர் ஏற்படுத்திய ஒரு சன்மார்க்க சங்கம் இயங்கி வருவதாகத் தெரிகின்றது. அவர் காலத்தில் 108 சன்மார்க்க சங்கங்கள் ஏற்படுத்தினாலும், தற்போது, 5 சங்கங்கள் முறையாகச் செயல்பட்டு, வருகின்றன.

அண்டை மாவட்ட சன்மார்க்க சங்க அன்பர்கள், இந்த ஐவர் மலையில், அந்தப் பகுதியில் வாழும் ஜனங்கள், வள்ளலார் நெறியினை எவ்வாறு செயல்படுத்தி வருகின்றனர் என்பதைப் பார்த்தாலே பிர்மிப்பூட்டுவதாக உள்ளது. அன்பர்கள் குழந்தை வேலப்பர் ஆலய கும்பாபிஷேகத்துக்குத் தம்மால் இயன்ற உதவியினைச் செய்ய வேண்டும் என இதற்கென ஏற்படுத்திய குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

IMG_20150808_092519.jpg

IMG_20150808_092519.jpg

IMG_20150808_092621.jpg

IMG_20150808_092621.jpg

IMG_20150808_114216.jpg

IMG_20150808_114216.jpg

IMG_20150808_123214.jpg

IMG_20150808_123214.jpg

IMG_20150808_123220.jpg

IMG_20150808_123220.jpg

IMG_20150808_134221.jpg

IMG_20150808_134221.jpg

IMG_20150808_140042.jpg

IMG_20150808_140042.jpg

IMG_20150808_140631.jpg

IMG_20150808_140631.jpg

IMG_20150808_153119.jpg

IMG_20150808_153119.jpg

IMG_20150808_153139.jpg

IMG_20150808_153139.jpg

IMG_20150808_153153.jpg

IMG_20150808_153153.jpg

IMG_20150809_101456.jpg

IMG_20150809_101456.jpg

IMG_20150809_101646.jpg

IMG_20150809_101646.jpg

IMG_20150809_101654.jpg

IMG_20150809_101654.jpg

IMG_20150809_101706.jpg

IMG_20150809_101706.jpg

IMG_20150809_101713.jpg

IMG_20150809_101713.jpg