DAEIOU - தயவு
இராமநாதபுரம் - பரமக்குடி - பெரிய பிச்சைப் பிள்ளையேந்தல்..நிறுவனர் நலம் வேண்டி பிரார்த்தனை.
     தமிழகத்தின் மிகவும் பின் தங்கிய தென் மாவட்டப் பகுதியில் அமைந்துள்ளதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பரமக்குடி வட்டம். பார்த்திபனூரை அடுத்த (8 கி.மீ) தூரத்தில், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிகளில் மிகவும் ஈர்க்கப்பட்ட சாது முத்துக் குமார் அவர்கள் (வயது 80) பெருமானாரின் நெறிகளை, இந்தப் பகுதி வாழ் மக்கள் அறிந்து கொள்வதற்கு, தனது நிலத்தினையே ஒரு களமாகப் பயன்படுத்தி அதில் ஞானகுரு சோதி வள்ளலார் தருமச்சாலை என்ற ஒரு தருமச் சாலையினை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நிறுவினார். வருடந்தோறும் இரு முறை விழாக்கள் எடுத்து, சன்மார்க்க சான்றோர்களை அழைத்து, சன்மார்க்க நெறி குறித்து, சொற்பொழிவுகளை நடத்தச் செய்து, அப்ப்குதியில் வாழ்கின்ற அன்பர்களுக்கு, அந் நெறியினைப் பரப்பி, அன்னதானம் செய்து வருகின்றார். ஏனைய நாட்களில், பசித்து வரும் அன்பர்களுக்கு, இல்லையென்னாது. அன்னம் பாலிப்பதை வழக்கமாகக் கொண்டு வருகின்றார். இந்த முறை, கடந்த 25.4.2015 அன்று, 20ஆம் ஆண்டு தருமச்சாலை விழா எடுத்து, சன்மார்க்க அறிஞர்களை அழைத்து, சொற்பொழிவு நடத்தி, சிறப்பாகக் கொண்டாடினார். ஏழை எளிய மக்களுக்கு வஸ்திர தானம் செய்து மகிழ்ந்தார். தாம் அமைத்த ஞான சபையில், 60 வயதுக்கு மேற்பட்ட அன்பர்களை மட்டுமே அனுமதிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவரது இப்பணியில், கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், மதுரை, பரமக்குடி போன்ற இடங்களில் இருந்து வந்த சன்மார்க்க அன்பர்கள், வருகை தந்து, தம்மால் ஆன உதவியினைச் செய்து, சொற்பொழிவு செய்து, சுத்த சன்மார்க்க நெறி பரவ ஒத்துழைத்தனர்.

       வயோதிகம், கடுமையான உணவுக் கட்டுப்பாடு, பெருமானின் நெறியில் தீவிரம் ஆகியவை காரணமாக, சற்றே உடல் நலிவுற்றுள்ளார். இந்த விழாவுக்கு வந்த அன்பர்கள் அனைவருமே அவர், நல்ல பூரண நலமெய்தப் பிரார்த்தனை செய்தனர். 

       குடலிலே ஏற்பட்டுள்ள அழற்சி காரணமாக, அவருக்கு இந்த வியாதி ஏற்பட்டுள்ளதாக அறியப் பட்டவுடன், தஞ்சாவூரில், சன்மார்க்க சபை நடத்தி வரும் அன்பர் டாக்டர் திரு தம்பையா அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டதில், திரு முத்துக்குமார் அவர்களின் சேவையைக் கேட்டறிந்து, அவரது மகனை வரச்செய்து, மருந்து கொடுத்து, அனுப்பி வைத்துள்ளார்.

      சாது திரு முத்துக்குமார் அவர்கள், தமது குடும்பத்தினர் அனைவரையுமே சுத்த்த சன்மார்க்க நெறியில் ஈடுபடுத்தியுள்ளவர். விழாவில், அவரது மகன்கள், மருமகள்கள், மனைவியார், பேரன், பேத்தி ஆகியோர் அனைவருமே பம்பரமாகச் சுழன்று, வரக்கூடிய அன்பர்களுக்கு ஜீவகாருண்யம் பேணி, அவர்களைத் தமது தருமச்சாலையில் தங்க வைத்து, பணிவிடை செய்து, விழாக்களில் பங்கேற்கச் செய்வார்கள்.

    சாது முத்துக் குமார் ஐயா அவர்களின் உடல் பூரண நலமடைய, அனைவரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் கருணையையும் வேண்டி நிற்கப் பிரார்த்தனை செய்யப்படுகின்றது.

திரு முத்துக்குமார் அவர்களின் செல் எண்: 91 98653 80512.
vlcsnap-2015-04-28-12h27m21s171.png

vlcsnap-2015-04-28-12h27m21s171.png

vlcsnap-2015-04-25-22h53m17s47.png

vlcsnap-2015-04-25-22h53m17s47.png

vlcsnap-2015-04-25-22h54m34s49.png

vlcsnap-2015-04-25-22h54m34s49.png

vlcsnap-2015-04-25-22h54m49s201.png

vlcsnap-2015-04-25-22h54m49s201.png

vlcsnap-2015-04-25-22h55m34s138.png

vlcsnap-2015-04-25-22h55m34s138.png

vlcsnap-2015-04-26-21h23m29s40.png

vlcsnap-2015-04-26-21h23m29s40.png

vlcsnap-2015-04-26-21h24m27s98.png

vlcsnap-2015-04-26-21h24m27s98.png

vlcsnap-2015-04-28-12h22m58s105.png

vlcsnap-2015-04-28-12h22m58s105.png

vlcsnap-2015-04-28-12h23m23s98.png

vlcsnap-2015-04-28-12h23m23s98.png

vlcsnap-2015-04-28-12h24m08s247.png

vlcsnap-2015-04-28-12h24m08s247.png

vlcsnap-2015-04-28-12h24m32s22.png

vlcsnap-2015-04-28-12h24m32s22.png

vlcsnap-2015-04-29-11h53m21s134.png

vlcsnap-2015-04-29-11h53m21s134.png

vlcsnap-2015-04-29-11h54m05s62.png

vlcsnap-2015-04-29-11h54m05s62.png

3 Comments
karuneegar umapathy
I talked with Ayya Muthukumar. I get very happy.
Saturday, May 2, 2015 at 07:36 am by karuneegar umapathy
Daeiou  Daeiou.
He conveyed here about your enquiry but thought that U R in Chennai.
Saturday, May 2, 2015 at 09:32 am by Daeiou Daeiou.
Durai Sathanan
We sincerely pray for AyyahThiru.Muthukumarsamy's speedy recovery, sound health and blissful eternal life. ArutPerumJothi....
Sunday, May 3, 2015 at 11:43 am by Durai Sathanan