DAEIOU - தயவு
27.1.2015 Thiruvalur Dt. Thiruvalangadu Arulmigu Vadarenyeswarar Temple.(1)
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஆலயம்.



=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=00=0=0=0=0=0=

“இறவாத இன்ப அன்பு
வேண்டி பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்து ;பாடி
அறவா நீ ஆடும் போது உன்
அடியின் கீழ் இருக்க....

(காரைக்கால் அம்மையாரின் வேண்டுகோளாக
பெரிய புராணத்தில் சேக்கிழார்)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=00=0=0==0=0=0=0=0=

ஓலங்காட் டும்பழைய னூர்நீலி வாதடக்கும்
ஆலங்காட் டிற்சூ ழ்ருண்மயமே...           (திரு அருட்பா)

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

      திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது திருவாலங்காடு என்ற சிவஸ்தலம். அருள்மிகு வடாரண்யேஸ்வரர் இங்கு உள்ள மூலவர் ஆவார். இறைவனால் “அம்மையே” என்று அழைத்துச் சிறப்பிக்கப் பெற்ற காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்து நடராசரின் திருவடிக்கீழிருந்து சிவானந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் திருத்தலமே “வடாரண்யம்” என அழைக்கப்பெறும் “திருவாலங்காடு” திருத்தலம் ஆகும். இறைவன் காளியுடன் ஊர்த்துவ நடனமாடிய திருத்தலமாகும்.

      நடராசப் பெருமான் திருநடனம் புரியும் பஞ்ச சபைகளுள் இரத்தின சபையாகவும் சிறப்புற்று விளங்குவது இத்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் ஆலயமாகும். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் இத்தலத்தை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், காரைக்கால் அம்மையார், பட்டினத்தடிகள், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் முதலான பல அருளாளர்களும் இத்திருத்தலத்தைப் பாடிப் பரவி உள்ளனர்.