DAEIOU - தயவு
22.11.2014 Karur Kalyana Pasupatheeswarar Temple..Songs of various saints..on the compound wall.
There is a famous temple named Kalyana Pasupatheeswarar Temple in Karur City. It is located just half a furlong from the Karur Bus Stand. During the year, 2010, compound walls of the above have been white/colour washed. Just to attract the devotees coming to the temple, wall painting of songs written by various Saints have been written on the compound walls. 



1. Sekkizhar (Periapuranam)
2. Arunagirinathar (Thiru Arutpa) 
3. St. Ramalingar (Thiru Arutpa)
4. Mambazha Kavirayar Songs.
5. Siva boga Saaram.
6. Thirumoolar Thirumandhiram.
7. Thayumanavar Paraparakanni
8. Vannacharaban Dhandapani Swamigal songs.
9. Thirugnana Sambandhar
10. Manickavasagar (Thiruvasagam)
11. Karuvur Ther songs.
12. Pattinathar.

      Attracted on seeing St.Vallalar's song (ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்). one boy aged 21 stood before the song wherein the wall painting has done and started writing it in a bit of paper. Writing of the spiritual songs on the walls of the temples,  tempts every one to read..it when they go round the temple.

     In such a way, Thiru Arutpa songs can also be written on the outer compound wall of the Vadalur Sathiya Gnana Sabai so as to attract viewers on the suddha sanmarga principles of St. Vallalar.

     கடந்த 22.11.2014 அன்று கருவுரில் அமைந்திருக்கும் கல்யாண பசுபதீஸ்வர சுவாமி கோவில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் கோவிலில், சுற்றுச் சுவர் முழுவதுமே, ஆன்மீகச் சான்றோர்களின் அற்புதமான பாடல்கள், எழுதப் பட்டிருந்தன.

1. சேக்கிழார் (பெரியபுராணம்)
2. அருணமிரிநாதர் (திருப்புகழ்)
3. இராமலிங்கப் பெருமான் (திரு அருட்பா)
4. மாம்பழக் கவிராயர்
5. சிவ போக சாரம்
6. திருமூலர் (திருமந்திரம்)
7. தாயுமான சுவாமிகள் (பராபரக் கண்ணி)
8. வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடல்கள்)
9. திருஞான சம்பந்தர்
10. மாணிக்கவாசகர் (திருவாசகம்)
11. கருவூர்த் தேவர் பாடிய பாடல்கள்.
12. பட்டினத்தார்.
      ஆலயத்தைச் சுற்றி வரும்போதே, நம்மை, இறை பக்தியில் ஈடுபடுத்துவதற்கு, இந்த அற்புதமான பணி அந்தக் கோவிலில் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. வள்ளற் பெருமானின் திரு அருட்பாவில் “ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்” என்ற பாடலினை, ஒரு 21 வயதுப் பையன், கையில் ஒரு தாளில், எழுதிக் கொண்டிருந்தார்.  என்ன செய்கின்றீர்கள் தம்பி எனக் கேட்ட போது இந்தப் பாடலை பல முறை பார்த்திருக்கின்றேன். இன்று, ஒரு தாளில் எழுதிக் கொண்டு செல்ல வேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்றான். இங்கு எழுதப் பட்டிருப்பதில், ஒரு பிழை உள்ளது. மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்..என்றிருக்க வேண்டும்...ஆனால் மறக்க வேண்டும்..என ஒரு பிழை உள்ளது. அதனை சரியாக எழுதிக் கொள்ளும்படி அந்தப் பையன் கேட்டுக் கொள்ளப்பட்டான்.

     இது போன்று, ஆலயங்கள் தோறும், ஆன்மீகப் பெரியவர்கள் பாடிய பாடல்களை எழுதினால், பொது மக்களுக்கு அதன்பால் ஒரு ஈர்ப்பு ஏற்படும்.

     வடலூரில், சுற்றுப்புறச் சுவரில் (மெயின் ரோடில்) அருட்பெருஞ்ஜோதி அகவலின் ஒரு சில வரிகள் மட்டுமே எழுதி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் எழுதப்பட்டதுபோல், பெருமானின் திரு அருட்பாவில் முக்கியமான பாடல்களை எழுதி வைத்தால் இங்கு வரும் மக்கள் மனத்தில் எப்படி அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ...என எண்ணம் வந்தது...பெருமான் தான் அதனை செயல்படுத்த உதவ வேண்டும்.
vlcsnap-2014-11-25-22h26m05s110.png

vlcsnap-2014-11-25-22h26m05s110.png

vlcsnap-2014-11-25-22h15m12s187.png

vlcsnap-2014-11-25-22h15m12s187.png

vlcsnap-2014-11-22-18h29m38s124.png

vlcsnap-2014-11-22-18h29m38s124.png

vlcsnap-2014-11-25-22h15m41s227.png

vlcsnap-2014-11-25-22h15m41s227.png

vlcsnap-2014-11-25-22h16m08s251.png

vlcsnap-2014-11-25-22h16m08s251.png

vlcsnap-2014-11-25-22h16m41s100.png

vlcsnap-2014-11-25-22h16m41s100.png

vlcsnap-2014-11-25-22h16m47s159.png

vlcsnap-2014-11-25-22h16m47s159.png

vlcsnap-2014-11-25-22h16m54s230.png

vlcsnap-2014-11-25-22h16m54s230.png

vlcsnap-2014-11-25-22h17m03s66.png

vlcsnap-2014-11-25-22h17m03s66.png

vlcsnap-2014-11-25-22h17m46s243.png

vlcsnap-2014-11-25-22h17m46s243.png

vlcsnap-2014-11-25-22h17m53s51.png

vlcsnap-2014-11-25-22h17m53s51.png

vlcsnap-2014-11-25-22h18m25s115.png

vlcsnap-2014-11-25-22h18m25s115.png

vlcsnap-2014-11-25-22h18m36s225.png

vlcsnap-2014-11-25-22h18m36s225.png

vlcsnap-2014-11-25-22h18m45s65.png

vlcsnap-2014-11-25-22h18m45s65.png

vlcsnap-2014-11-25-22h19m02s227.png

vlcsnap-2014-11-25-22h19m02s227.png

vlcsnap-2014-11-25-22h19m24s196.png

vlcsnap-2014-11-25-22h19m24s196.png

vlcsnap-2014-11-25-22h27m02s115.png

vlcsnap-2014-11-25-22h27m02s115.png

3 Comments
karuneegar umapathy
if we get a chance to pay donation to any temple..our Sanmargis should insist to write Thiruarutpa ..and ask place for Jothi vallalar temple.
I did.. it is workable.
Wednesday, November 26, 2014 at 18:08 pm by karuneegar umapathy
Daeiou  Daeiou.
Nandri ayya.
Wednesday, November 26, 2014 at 22:37 pm by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
இந்த ஆலயத்தில் அரசு திட்டத்தின்படி, மதியம் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகின்றது. அதன் மூலம் மதிய உணவுண்பதற்கு, பக்தர்கள், ஏழை எளியோர், சுமார் 60 பேர் வரை கூடியிருந்தனர். அன்னதானம் வழங்கப்படும் இடம், இடது புறத்தில் அமைந்திருந்தது.
சுமார் 12.45 மணி அளவில், மூத்த அன்பர் ஒருவர், தன் மனைவியுடன் வருகை புரிந்து, ஆலயத்தின் முன்புறம் தரிசனம் செய்து விட்டு, அமர்ந்திருந்த ஏழை எளியோர்களுக்கு, சுமார் 20 நபர்களுக்கு, சாம்பார் கலவை சாதத்தினை வழங்கினார். அவரிடம் இது குறித்து வினவியதற்கு, தாம் கரூரைச் சேர்ந்தவர்தான் என்றும், இரண்டு மாதங்களுக்கு முன்னர், தமது வீட்டிற்கு ஒருவர் வந்து, அன்னதானமே சிறந்த வழிபாடு என்று சொன்னதன்பேரில், தம் வீட்டில், மதிய உணவு தயாரித்து, ஆலயத்தில் உள்ளோருக்கு வழங்கி வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வள்ளற் பெருமானின் ஜீவகாருண்யப் பணி, அன்பர்களுக்கு யார் மூலமோ சொல்லப்பட்டு, அதனை செயல்படுத்திய அவருக்கு அங்கு நன்றி சொல்லப்பட்டது.
Monday, December 1, 2014 at 06:34 am by Daeiou Daeiou.