வள்ளலார் சன்மார்க்க பவுண்டேஷனில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் திரு அருட்பா பாராயணத்தில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர் அனைவரும் இந்த சொற்பொழிவில் கலந்து கொண்டு, திரு அருட்பா பாடல்களை அருமையாக இசைத்தனர்.
நாராயணபுரத்தை சேர்ந்த திரு முருகேசன் அவர்களின் மகன் திரு கார்த்திக் ராம், வள்ளலாரைப் போன்றே வெண் ஆடை அணிந்து வந்து ஒரு சில திரு அருட்பாக்களைப் பாடினர்.
இந்த நிகழ்ச்சி, அன்பர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்ற அதன் பின்னர், பேராசிரியர் சொ.. சொ.மீ. சுந்தரம் M.Com, M.Phil அவர்கள், "வள்ளலார் வாக்கு" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
வந்திருந்த அன்பர்கள் அனைவரும் மெய்ம்மறந்து இந்த சுத்த சன்மார்க்க விளக்க நிகழ்ச்சியினை விரும்பி ரசித்து கேட்டனர்.
இந்த நிகழ்ச்சி, இந்த இணைய தளத்தின் ஆடியோ பிரிவில் அன்பர்கள் கேட்கலாம்.
Write a comment