24.12.2011 முதல் 28.12.2011 வரை சென்னை டி.நகரில் சங்கீத் சாகர் கல்சுரல் ட்ரஸ்ட் நடத்தும் 7ஆம் ஆண்டு இசை, நாடக, நாட்டிய விழா.
=0=0=0=0
வருடந்தோறும், சென்னையில் சங்கீத் சாகர் கல்சுரம் ட்ரஸ்ட் மற்றும் இராசராசன் கல்வி பண்பாட்டு கழகம் இணைந்து வழங்கும் இசை நாடக நாட்டிய விழா டிசம்பர் மாதம் நடைபெறும்.
அந்த வகையில் இந்த 2011 ஆம் ஆண்டில், 24.12.2011 முதல் 28.12.2011 வரையில் இந்த இசை நாடக நாட்டிய விழா, சென்னை டி.நகரில் அமைந்துள்ள நிர்.100 அபிபுல்லா சாலையில் உள்ள பசும்பொன் தேவர் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அவ்விழாவில் முதல் 3 நாட்கள் திரு அருட்பா பாடல்கள், நாடக நாட்டியங்கள் எல்லாம் நடைபெற உள்ளன.
இவ்விழாவில் அனைத்து சன்மார்க்க அன்பர்களும், தமது உற்றார் உறவினர்களுடன் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி, திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.
விழா அழைப்பிதழ் வரப்பெற்றவுடன், இந்த இணைய தளத்தில், அது வெளியிடப்படும்.