24.11.2011 மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள கேப்டன் லிங்கம் முதியோர் இல்லத்தில் சுத்த சன்மார்க்க விளக்கவுரைக் கூட்டம்.
=0=0=0=
மதுரை நாகமல புதுக்கோட்டையில் S.B.O.A. பள்ளியின் எதிர்புறத்தில் அமைந்துள்ள கேப்டன் லிங்கம் முதியோர் இல்லத்தில் 4.11.2011 அன்று திரு அருட்பிரகாச வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகள் விளக்கவுரைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை நாராயணபுரத்தில் உள்ள வள்ளலார் சன்மார்க்க பெளண்டேஷனின் மேனேஜிங் ட்ரஸ்டி, திரு ஏ.ராமானுஜம், இந்த விளக்கவுரைக் கூட்டத்தினை நடத்தி, அங்கு தங்கியுள்ள அனைவருக்கும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகள், சத்விசாரத்தின் மேன்மை, தினசரி ஜீவகாருண்ய ஒழுக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் விரிவான முறையில் விளக்கினார். காலை 11.00 மணி அளவில் துவங்கிய இந்த விளக்கவுரைக் கூட்டம், மதியம் 1.30 மணி வரையில் நடைபெற்றது.
009.JPG
027.JPG