DAEIOU - தயவு
இன்று இவரைப்பற்றி.....சென்னை பூந்தமல்லி (அமைந்தகரை) அன்பர் திரு கோசலராமன் அவர்களின் சன்மார்க்கப் பணி.

சென்னை பூந்தமல்லி (அமைந்தகரை) அன்பர் திரு கோசலராமன் அவர்களின் சன்மார்க்கப் பணி.

=0=0=0=0=

சென்னையில் பூந்தமல்லி அமைந்தகரையில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் திரு கோசலராமன் அவர்கள், தமது இல்லத்தின் மூலம் சன்மார்க்கம் பரவுவதற்காக, ஏற்பாடு செய்துள்ளார். சென்னையிலும் சரி, தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சி நடைபெற்றாலும் சரி, அங்கெல்லாம் சென்று, திரு அருட்பா மற்றும் அருட்பா விரிவுரை நூல்கள் முதலானவற்றை விற்பனை செய்யும் பணியை மேற்கொண்டு, சன்மார்க்கம் எல்லா மக்களிடமும் சென்றடைய வேண்டும் என்பதற்காக அரும்பாடு பட்டு வருகின்றார்.

இந்த ஆண்டு (2011) ஜனவரி இறுதி வாரத்தில் திருவான்மியூரில் நடைபெற்ற Hindu Spiritual and Service Fair, 2011 புத்தகக் கண்காட்சியில் திரு அருட்பா மற்றும் அது சம்பந்தப்பட்ட விரிவுரை விற்பனை நிலையத்தில் தமது குடும்பத்தாருடன் பணி செய்து வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க சென்னை வாழ் மக்களிடம் பரவுவதற்கு அரும்பாடுபட்டு வருகின்றார்.

இவர், தம்மை திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் ஆட்கொண்ட விதம் பற்றியும், சுத்த சன்மார்க்க விளக்கத்தையும் தெரிவித்து ஒரு விரிவுரை செய்துள்ளார். அந்த உரை, இன்று, 30.9.2011 இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அன்பர்கள் அதனை இந்த இணைய தளத்தில் ஆடியோ செக்க்ஷனில் கேட்டு இன்புறலாம்.