DAEIOU - தயவு
சென்னையில் 24.12.2011 முதல் 28.12.2011 வரை திரு அருட்பா இசை விழா .

சென்னையில் 24.12.2011 முதல் 28.12.2011 வரை திரு அருட்பா இசை விழா .

0=0=0=0=0=

வருடந்தோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் பல்வேறு கான சபைகளிலும் இசை விழா நடைபெறும் என்பது ஒரு தெரிந்த விஷயம் ஆகும். ஆனால், திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் என்ற அன்பர் டி.நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள பசும்பொன் தேவர் மண்டபத்தில் சங்கீத் சாகர் கல்சுரம் ட்ரஸ்ட் மூலம் 5 நாட்கள் இசை விழா நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

நடப்பு 2011ஆம் ஆண்டில், 24.12.2011 முதல் 28.12.2011 வரையில் அந்த இசை விழா நடைபெற உள்ளது. அவர், கடந்த 22.9.2011 அன்று ஜெயா ட்.வி.க்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார். அதில் முதல் 3 நாட்கள், திரு அருட்பா இசை விழாவாக அவர் கொண்டாட உள்ளார். மாலை 4.00 மணி முதல் இரவு 8.45 வரையிலும் தினந்தோறும் இந்த விழா சிறப்பாக நடைபெறும்.

விரிவான விபரங்கள், அழைப்பிதழ் வரப்பெற்றதும் இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும்.


செய்தி தொடர்புக்கு - திரு ஜி.ஆத்மநாதன் செல். எண். 93801 25989.

112

112

113

113