DAEIOU - தயவு
21.8.2011 வடலூரில் வள்ளலார்ஸ்பேஸ் இணைய தளம் பற்றியும் அதனை உபயோகிப்பவர்களுக்கு திரு செந்தில் மருதையப்பன் அவர்கள் விரிவான விளக்கம் தரல்.

21.8.2011 வடலூரில் வள்ளலார்ஸ்பேஸ் இணைய தளம் பற்றியும் அதனை உபயோகிப்பவர்களுக்கு திரு செந்தில் மருதையப்பன் அவர்கள் விரிவான விளக்கம் தரல்.

நாள் 21.8.2011 (ஞாயிற்றுக் கிழமை)

நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 1.45 மணி வரை.

=0=0=0=

www.vallalarspace.com இணைய தளத்தில் உள்ள விவரங்களை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கும். ஏற்கனவே அந்த இணைய தளத்தில் இடம்பெற்றிருக்கும் சன்மார்க்க சங்கங்களுக்கு, விரிவான விளக்கங்களை தெரிவிப்பதற்கும், அமெரிக்காவில் உள்ள திரு செந்தில் மருதையப்பன் அவர்கள், தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, 21.8.2011 ஞாயிற்றுக் கிழமை அன்று, வடலூரில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத் தங்கல் மனையில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்தினை, வள்ளலார்ஸ்பேஸ் டீம் மூலம் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த இணைய தளத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள சன்மார்க்க சங்கங்களுக்கு உரிய காலத்திலேயே, புதுச்சேரியைச் சேர்ந்த அன்பர் திரு குமரேசன் அவர்கள், முன் கூட்டியே அனுப்பி வைத்திருந்தார். அந்த அழைப்பினை ஏற்று, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரி, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து, கடந்த 21.8.2011 ஞாயிற்றுக் கிழமை அன்று, பல்வேறு மூத்த சன்மார்க்க அறிஞர் பெருமக்கள், சங்கத்தினர் ஆகியோர் வடலூருக்கு, வருகை தந்திருந்தனர்.

இந்தக் கூட்டம் நடத்துவதற்கு வசதியாக, இராமநாதபுரம் மாவட்டத் தங்கல் மனையில் அனைத்து முன்னேற்பாடுகளையும், இராமநாதபுரத்தில் வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் வைத்து நடத்திவரும் திரு ராஜவீர் மற்றும் அவரது துணைவியார் திருமதி ஹரி லக்ஷ்மி ஆகியோர் இல்லத்தில் தங்கிப் பயின்று வரும் மாணாக்கர்கள் சகிதம் வடலூருக்கு வருகை தந்து ஏற்படுத்தித் தந்தார்.

காலை 10.00 மணிக்கு திரு செந்தில் மருதையப்பன் அவர்கள், இந்த இணைய தளத்தின் பயன்பாடு குறித்து விரிவாக விளக்கம் அளித்து பேசினார். ப்ரொஜக்டர் மூலம், இந்த இணைய தளத்தில் இடம்பெற்றிருக்கும் சன்மார்க்க சங்கங்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவர், விரிவாக விளக்கம் அளித்து, கேட்கப்படும் சந்தேகங்களுக்கும் தெளிவுரையினை அளித்தார்.

மேலும், இந்த இணைய தளத்தின் மூலம், வெளி நாட்டினர் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களைப் புரிந்து கொள்ளுவதற்கு, வசதியாகவும், அவர்கள் அதனை உணர்ந்து கொண்டு, தமது வாழ்வில் அதனைப் பின்பற்றுவதற்கு வசதியாகவும், திரு அருட்பா, உரைநடைப்பகுதி ஆகியவற்றினை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகளை அனைவரும் வெகு விரைவிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மிகவும் வலியுறுத்திப் பேசினார். இதனை தலையாக பணியாகக் கொண்டு, அனைவரும் செயல்படும்படியும் அவர் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

இந்த இணைய தளத்தில் இடம் பெற்றிருக்கும் சன்மார்க்க சங்கங்கள், தமது சங்கத்தில் நடைபெறும் விபரங்கள் ஆடியோ செய்திகள், போட்டோக்கள் முதலானவற்றை, முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே இடம் பெற்ற சங்கங்கள் தவிர, ஆங்காங்கு இயங்கி வரும் ஏனைய சன்மார்க்க சங்கங்களும் தங்களது செயல்பாடு, எத்தனை ஆண்டுகளாக, அந்த சங்கம் சன்மார்க்கப் பணி பார்த்து வருகின்றது என்ற விபரத்தினைத் தெரிவித்து, இலவசமாக இடம் பெற்றுக் கொள்ளும்படியும், அதன்பின்னர், அதனை நன்கு பயன்படுத்தும்படியும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

அவரது கோரிக்கையின் உள்ளார்ந்த பொருளைப் புரிந்து கொண்ட அன்பர்கள் தமது சன்மார்க்க சங்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை இந்த இணைய தளத்தில் உடனுக்குடன் போஸ்டிங் செய்வோம் எனத் தெரிவித்தனர். மேலும், திரு அருட்பா மற்றும் உரை நடைப்பகுதி ஆகியவற்றில் இதுவரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகள் போக, தம்மால் ஏனைய பகுதிகளையும் மொழிபெயர்ப்பு செய்வதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வோம் என உறுதி அளித்தனர்.

மதியம் 1.45 மணி அளவில் இந்த கலந்துரையாடல் நிறைவு பெற்றது, சன்மார்க்க சங்கங்கள் சார்ந்தோர் சுமார் 60 பேர் இந்தக் கலந்துரையாடலில் பங்கு பெற்றனர். அனைவருக்கும் மதிய் உணவு அளித்த பின்னர், 3.30 மணி அளவில், இந் நிகழ்ச்சி நிறைவுற்றது.


069.JPG

069.JPG

005.JPG

005.JPG

098.JPG

098.JPG

056.JPG

056.JPG

059.JPG

059.JPG

082.JPG

082.JPG

081.JPG

081.JPG

089.JPG

089.JPG