மதுரை கே.புதூரில் அன்பர் திரு தர்மலிங்கம் அவர்களின் சன்மார்க்கப் பணி.
மதுரை கே.புதூரில் ராம வர்மா நகரில் குடியிருக்கும் அன்பர் திரு தர்மலிங்கம் அவர்களுக்கு சொந்த ஊர் முதுகுளத்தூர் ஆகும். அவரது வயது 57. அங்கு 3 ஆண்டுகள் சன்மார்க்க சங்கம் தான் ஏற்படுத்திய தொழில் நிறுவனத்தின் மாடியில் வைத்து அன்னதானம் செய்து வந்தார். இராமநாதபுரம் மாவட்ட சன்மார்க்கசங்கத் தலைவர் திரு ஜோதிமுருகன் அய்யா அவர்களின் தலைமையில் இந்த சங்கம் செயல்பட்டு வந்தது. ஒரு விபத்தின் காரணத்தால் தனது கால் பாதிக்கப்பட்டது. மேலும் தன் குடும்பச் சூழ் நிலை காரணமாக அன்பர் திரு தர்மலிங்கம், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு தன் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். எந்த சன்மார்க்க சங்கக் கூட்டத்திற்கும், தனது குடும்பத்துடன் இவர் ஆஜராகி, தொண்டு புரிவார். ஒரு ஆண்டுக்கு முன்பாக, சன்மார்க்க சங்க அன்பர்கள் வந்து செல்லும் விதத்தில் தனது வீட்டில் மேல் மாடி எழுப்பி அகவல் பாராயணம், சத்விசாரம் முதலானவை நடைபெற ஏற்பாடு செய்துள்ளார். தினந்தோறும் கே.புதூர் பஸ் ஸ்டாண்டு எதிரில் உள்ள புகழ்பெற்ற சர்ச் முன்புறமாக அன்னதானப் பணி மேற்கொண்டு வருகின்றார். பிரதி மாதந்தோறும் அமாவாசை நாட்களில் சன்மார்க்க மூத்த அன்பர்கள் முதலானோரை அழைத்து, சொற்பொழிவு ஏற்பாடு செய்து அன்னதானம் செய்து வருகின்றார். தனி மனிதராக, இவர், இச் செயல்களைச் செய்து வருகின்றார் என்பது சிறப்பு. வளரட்டும் அவரது சன்மார்க்கத் தொண்டு.
004