DAEIOU - தயவு
சித்திரா பெளர்ணமி நாளில், திரு அருட்பா இசை நிகழ்ச்சி வேண்டுவோர்-திருபுவனம் திரு ஜி. ஆத்மநாதன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

திரு அருட்பா இசை நிகழ்ச்சி வேண்டுவோர்-திருபுவனம் திரு ஜி. ஆத்மநாதன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

=0=0=0=

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த திருபுவனம் திரு ஜி. ஆத்மநாதன் அவர்கள், வடலூர் திரு அருட்பா இசைச் சங்கத்தில் அலுவல் சார்ந்த ஒரு உறுப்பினர். வருடந்தோறும் வடலூரில், தை பூச நாட்களை ஒட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளில், திரு அருட்பா இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். இவரிடம், பலரும் திரு அருட்பாவினை, முறையான தமிழிசையின் மூலம் கற்று வருகின்றனர்.

சங்கீத் சாகர் கல்சுரல் ட்ரஸ்ட் என்ற ஒரு அமைப்பின் மூலம், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும், மற்றும் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலும், வருடந்தோறும் சித்திரா பெளர்ணமி நாளில், தமது இசைக் குழுவினருடன் திரு அருட்பா இசை நிகழ்ச்சியின் மூலம், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்பி வருகின்றார்.


முதல் 5 வருடங்கள் - சென்னையில் திரு அருட்பா இசை நிகழ்ச்சி நடத்தினார்.

6வது ஆண்டில் தஞ்சாவூரில் தமது சொந்த ஊரான திருபுவனத்தில் நடத்தியுள்ளார்.

7வது ஆண்டில், பாண்டிச்சேரி மாநிலம், கம்பளிக்காரன் குப்பம் என்ற ஊரில் நடத்தியுள்ளார்.

8வது ஆண்டில் திண்டுக்கல்லில், மலையடிவாரம் சன்மார்க்க சங்கம் சார்பில், அங்கு உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடத்தியுள்ளார்.

9வது ஆண்டில், மதுரையில், தெப்பக்குளம் அருகில் உள்ள ஸ்ரீமந் நடன கோபால் நாயகி அரங்கில் நடத்தியுள்ளார்.

10வது ஆண்டில், கோயம்புத்தூரில் திரு அருட்பா இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

நடப்பு (2011) 11வது ஆண்டில் 17.4.2011 அன்று, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பாதையில், திரு அருட்பா இசை நிகழ்ச்சியினை நடத்தியுள்ளார்.

அவர், உலகின் பல்வேறு நாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையில் (Federation of Tamil Sangams of North America)அவர், இசை நிகழ்ச்சியினை ஏற்கனவே நடத்தி உள்ளார்.

திரு அருட்பா இசை நிகழ்ச்சியினைத் தமது மாவட்டத்தில் சித்திரா பெளர்ணமி நாளில் நடத்த விரும்பும் சன்மார்க்க சங்கத்தினர் / சன்மார்க்க அன்பர்கள் அவரை, கீழ்க்காணும் செல் எண்ணில் திருபுவனம் திரு ஜி. ஆத்மநாதன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்விதமான திரு அருட்பா இசை நிகழ்ச்சிகளை அவர் நடத்திக் கொடுப்பதற்கு, அவருடன் வரும் இசைக் கலைஞர்கள், பாடகர்கள், தங்குமிடம், உணவு, இசைக் கச்சேரி செய்வதற்குரிய மேடை போன்றவற்றில் செலவுகளை மட்டும் ஏற்றுக் கொள்வோருக்கு, அவர் இது போன்ற நிகழ்ச்சியினை நடத்திக் கொடுக்கின்றார்.

அவரைத் தொடர்பு கொள்ள - செல் எண். (91) 93801 25989.