வள்ளலார் இயற்றிய மனுமுறை கண்ட வாசகம்-திருவாரூரான் ஆலயக் காட்சிகள்.
=0=0=0=0=
,
தியாகராஜப் பெருமான் எழுந்தருளிய கமலாலயமென்னுந் திருக்கோயிலை உள்ளேயுடையதாய், சோழ ராஜர்கள்
பரம்பரையாக அரசாட்சி செய்வதற்குரிய ராஜ தானியாய் நிலமகள் திருமுகத்திலிட்ட திலகம்போல் விளங்கியது திருவாரூர்
என்கின்ற நகரம்.
யான் என்கின்ற ஆணவப்பேயும்
எனதென்கின்ற இராட்சதப் பேயும்
மாயை யென்கின்ற வஞ்சகப் பேயும்
பெண்ணாசை யென்கின்ற பெரும் பேயும்
மண்ணாசை யென்கின்ற மானிடப் பேயும்
பொன்னாசை யென்கின்ற பொல்லாப் பேயும்
குரோதமென்கின்ற கொள்ளிவாய்ப் பேயும்
உலோப மென்கின்ற உதவாப் பேயும்
மோக மென்கின்ற மூடப் பேயும்
மத மென்கின்ற வலக்காரப் பேயும்
மாச்சரிய மென்கின்ற மலட்டுப் பேயும்
மனப்பேயோடு கூடி இரவும் பகலும் ஆட்ட, ஆடி ஆடியிளைக்கின்ற அடியேனைக் காத்தருளத் திருவுள்ளமிரங்கித்
தரிசனமருளி, துன்பத்தை நீங்கி இன்பத்தை யளித்த எம்பெருமானே என்னாண்டவனே என் தந்தையே என் தாயே
என் குருவே என் தெய்வமே என் குலதெய்வமே என் உயிர்த் துணையே என் அறிவுக்கறிவாகிய இறைவனே தேவரீர்
திருவடிப் புகழை வேதங்களுமறியாது விழித்துக் கொண்டு தேடிதேடி இளைக்கின்றனவென்றால், குருமி கீடங்களிலுங்
கீழ்ப்பட்ட அசேதனனாகிய அடியேன் எப்படி அறிந்து துதிப்பேன் தேவரீர் திருவடிக் காட்சி பலிக்கும்படி செய்வித்த
இந்தப் பசுவுக்கும் கன்றுக்கும் என்னை அடிமையாகக் கொடுப்பேன் அல்லது வேறென்ன கைமாறு செய்வேன்.
தேவரீர் திருமேனிக் காட்சி கிடைப்பதற்குக் காரணமாகிய வீதிவிகங்கனென்னும் புத்திரன் இன்றுதான் எனக்குப்
புத்திரனாயினான். தேவரீரது திருவருட் கோலத்தைக் காணப்பெற்ற அடியேனுக்கு இனி என்ன குறை இருக்கின்றது.
075
015
163
149
180
182
184
196
005
173
166
178
164
076
102
189
144
077