DAEIOU - தயவு
13.2.2011 ஞாயிறு - சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா மூங்கில் ஊரணி கிராமத்தில் மாதப் பூச விழா நிகழ்ச்சிகள்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா மூங்கில் ஊரணி கிராமத்தில்

மாதப் பூச விழா நிகழ்ச்சிகள்.

இடம் - வள்ளலார் கோவில், மூங்கில் ஊரணி.

நாள் - 13.2.2011 ஞாயிறு

நேரம் - காலை 10.00 மணி

=0=0=0=0=

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா மூங்கில் ஊரணி கிராமத்தில் கடந்த ஆண்டு மானாமதுரையைச்

சேர்ந்த திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவியார் திருமதி ஜெயவள்ளி நாயகம் ஆகியோரின் பெரு முயற்சியால்

வள்ளலார் கோயில் கட்டி, திறப்பு விழா செய்யப்பட்டது. பெரும்பாலும் கிறிஸ்துவ மக்கள் வசிக்கும் இந்த சிறிய

கிராமத்தில் இந்த வள்ளலார் கோயில் அமைந்ததன் காரணம் வள்ளற் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்கக்

கருத்துக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதுதான். மாதாமாதம் பூச நாள் வழிபாடும், ஏழை

எளியோருக்கு ஜீவகாருண்யம் செய்யும் வகையில் அன்னமளிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த மூங்கில் ஊரணியில், 13.2.2011 (ஞாயிற்றுக் கிழமை) காலை சுமார் 10.00 மணி அளவில், மாதப் பூச

நிகழ்ச்சிகளை அமைப்பதற்கு, நிறுவனர் ஏற்பாடு செய்துள்ளார். சிறப்பு பேச்சாளராக, மதுரை நாராயணபுரம்

வள்ளலார் சன்மார்க்க பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் பங்கு கொண்டு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் திருவருளைப் பெற்று

உய்யும்படி நிறுவனர் கேட்டுக்கொள்ளுகின்றார்.