மதுரை காமராசர் பல்கலைக் கழக காந்தியியல் இராமலிங்க அடிகளார் தத்துவத்துறை.
முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு நடைபெறல்.
நாள் 4.2.2011 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணி
=0=0=0=0=
இன்று 4.2.2011 (வெள்ளிக் கிழமை) காலை சுமார் 11.00 மணி அளவில், மதுரை சொக்கிகுளம்
அருகே என்.எம்.ஆர்.சுப்புராமன் அவர்களின் கட்டிடத்தில் இயங்கி வரும் மதுரை காமராசர் பல்கலைக்
கழக காந்தியியல் இராமலிங்க அடிகளார் தத்துவத்துறையில், முனைவர் பட்டப் பொது வாய்மொழித்
தேர்வு நடைபெற்றது.
திருமதி ஆ.தாமரைச் செல்வி அவர்கள் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகளின் பேரில்,
இந்த முனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு நடைபெற்றது. வள்ளலாரின் திரு அருட்பாவில் திருவருளும் சமூக
நீதியும் என்ற தலைப்பில் இந்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. கேரள மாநிலம் மகாத்மா காந்தி பல்கலைக்
கழகத்தைச் சேர்ந்த காந்திய சிந்தனை மற்றும் வளர்ச்சிப் புல இயக்குனர் முனைவர் திரு எம்.மகாராஜன் அவர்கள் புறத்
தேர்வாளராக இருந்தார். டாக்டர் இரா. அழகிரிசாமி, முனைவர் அவர்கள் இந் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.
திரு அழகிரிசாமி,(இடது) புறத்தேர்வாளர் முனைவர் திரு எம். மகாராஜன். கேரளா, (நடுவில்)
திருமதி தாமரைச்செல்வி, மதுரை.(வலது)
ஆன்றோர் பெருமக்கள் பலரது
முன்னிலையில் நடைபெற்ற இவ் வாய்மொழித் தேர்வில், திருமதி ஆ.தாமரைச் செல்வி அங்கு கூடியிருந்த
ஆன்றோர் பலரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில்களைத் தெரிவித்தார். எனவே அவர், தேர்வு
செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.